மதுரை:
மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 1500 முதல் 2 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனை முடிவுகளை நேரில் பெற இதுவரை காலை பத்து மணி முதல் மாலை 4:30 வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. அதன்படி காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை பெறலாம்.வீட்டிலிருந்தபடி http://mdmc.ac.in என்ற இணையதளமுகவரியிலும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக அம்முகவரியில் உள்ள டவுண்லோடு என்னும் வசதியை பின்பற்றி, பெயர், வயது, அலைபேசியின் கடைசி ஐந்து இலக்கத்தை பதிவிட்டால்போதும். பரிசோதனை முடிவு வெளியான நாளிலிருநது ஏழு நாட்கள் வரை பார்க்கலாம் என மதுரை அரசுமருத்துவமனை முதன்மையர் சங்குமணி தெரிவித்துள்ளார்.