tamilnadu

img

வேலைதேடும் தமிழர்களுக்கு இந்தி உதவியாக இருக்குமாம்

லக்னோ:
இந்தி கற்றால் தில்லி, மும்பைக்கு வேலை தேடிவரும் தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உத்தரப்பிரதேச பாஜக முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார்.‘நெட்வொர்க் 18’ குழுமத்தின் முதன்மை ஆசிரியர் ராகுல் ஜோஷி நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்று ஆதித்யநாத் பேசியுள்ளார்.அப்போது, இந்தி என்பது நம் நாட்டின் அலுவல் மொழி எனவும், அதற்கு மதிப்பளிக்க வேண்டியது நமது கடமை எனவும் தெரிவித்துள்ள ஆதித்யநாத், அனைத்து மாநிலங்களிலும், மாநில மொழியோடு சேர்த்து ஆங்கிலம் கற்றுத் தரப்படுவது மாற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலம் இருக்கும் இடங்களில் இந்திதான் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.குறிப்பாக, இந்திக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் தமிழர்களை சீண்டும் விதமாக, இந்தி மொழியை கற்றுக்கொண்டால், தில்லி, மும்பைக்கு வேலை தேடி வரும் தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விஷமமாக பேசியுள்ளார்.உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் போன்ற இந்தி பேசும் மாநில இளைஞர்கள், வேலைக்காக தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும் உண்மையை மறைத்து விட்டு, ஆதித்யநாத் இந்தி மொழிப் பெருமை பீற்றியுள்ளார்.