ராஞ்சி
நாட்டின் கிழக்கு பகுதி மாநிலமான ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது.
இந்த அமைச்சரவையில் குடிநீர் மற்றும் துப்பரவுத்துறை அமைச்சராக இருப்பவர் மித்லேஷ் தாகுர். இவருக்கும் மதுரா மஹதோ என்ற எம்எல்ஏ-வுக்கும் (ஆளுங்கட்சி) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதிக்கப்பட்ட 2 நபர்களுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் முதல்வர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும், வீட்டில் சுய தனிமைப்படுத்துதலில் இருக்கும்படி அவர் கேட்டு கொண்டார்.