போபால்:
வழக்கறிஞர் ஒருவரை கடுமையாகத் தாக்கி, அதற்கு தற்போது மன் னிப்பும் கேட்டிருக்கிறது மத்தியப்பிரதேச காவல்துறை.மத்தியப்பிரதேசத்தில் வழக்கறிஞராக இருப்பவர் தீபக் புந்துலே. இவர்,கடந்த 23-ஆம் தேதி மருந்து வாங்க கடைக்குச் சென்ற போது, மத்தியப் பிரதேச போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். தானொரு வழக்கறிஞர் என்பதைச் சொல்லிப் புரியவைத்தபிறகே, நீண்ட நேரத்திற்குப் பின்னர் தாக்குதலை நிறுத்தியுள்ளனர்.எனினும், போலீஸ் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த தீபக் புந்துலேமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள் ளார்.மார்ச் 23-ஆம் தேதி இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிகிச்சைக்குப் பின்னர், காவல் துறையினர் மீது தீபக் புந்துலே வழக்குதொடர்ந்துள்ளார். பல்வேறு துறைஅதிகாரிகளுக்கும், மனித உரிமைஆணையத்திற்கும் புகார் அளித்துள்ளார்.மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங்சவுகானுக்கும் கூட அவர் புகார் அனுப்பத் தவறவில்லை.இதையடுத்து, கடந்த மே 17-ஆம் தேதி தீபக் புந்துலே-வை அவரது வீட்டிற்கே தேடிச்சென்ற போலீசார், தவறுதலாக நடைபெற்று விட்டது; தயவுசெய்து எங்களை மன்னித்து வழக்கைத்திரும்பப் பெறுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடியுள்ளனர்.இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ‘ஏன் என்னை காரணம் இல்லாமல் தாக்கினீர்கள்?’ என்ற கேள்விக்கு, “நீங்கள் நீண்ட தாடிவைத்துக் கொண்டு பார்க்க முஸ்லிம்போல இருந்தீர்கள், அதனால் அடித் தோம்” என்று தெரிவித்துள்ளனர்.அதாவது ஒருவர் முஸ்லிமாக இருந்தாலே அவரை தாக்கலாம்; அதற்கு வேறு காரணம் தேவையில்லை என்பதுபோல கூறியுள்ளனர். இத்தகவலை வழக்கறிஞர் தீபக் புந்துலே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.