tamilnadu

img

பாகிஸ்தானில் கொரோனா பரவல் குறைகிறது... 

லாகூர் 
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்திலிருந்து நேற்று வரை (திங்கள்) தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கு மேல் தான் இருப்பது வழக்கம். குறிப்பாக ஜூன் கடைசி வாரத்தில் தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் குறுகிய காலத்தில் பாகிஸ்தான் உலகின் கொரோனா பாதிப்பு அட்டவணையில் டாப் 12-க்குள் சென்றது. 

இந்நிலையில், ஜூலை மாத தொடக்கத்திலிருந்து அந்நாட்டில் கொரோனா பரவல் சற்று மந்தமாக உள்ளது. குறிப்பாக 2 மாதத்துக்கு பின் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்குள் சென்றுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,979 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மொத பாதிப்பு 2.53 லட்சமாக உள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 54 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,320 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இதுவரை 1.70 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.    
தன்னுடைய அண்டை நாடுகள் கொரோனாவால் திணறி வரும் நிலையில், சத்தமில்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளது.