tamilnadu

img

போதை மருந்து கொடுத்து அழைத்து வரப்படும் பெண்கள்... மேற்குவங்க பாஜக தலைவர் திமிர்ப் பேச்சு

கொல்கத்தா:
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், “போராட்டங்களில் போதை மருத்து சாப்பிட்டு விட்டு, கூச்சல்போடுகிறார்கள்” என்று பாஜக தலைவர்திலீப் கோஷ், பெண்களைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.

மேற்குவங்கத்தில் உள்ள ரவீந்திர பாரதிபல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:“மேற்குவங்க மாநிலத்தின் கலாச்சார மரபுகள் பாழாகி வருகின்றன. பெண்கள் நமதுகலாச்சார பாரம்பரியத்தை மறந்து விடுகிறார் கள். அவர்கள் போராட்டங்களின் முகமாக மாற்றப்படுகின்றனர். போதைப்பொருளின் தாக்கத்தால் நாள் முழுவதும் அவர்கள் கூச்சலிடுகின்றனர். இது என்ன வகையான வங்கமோ? தெரியவில்லை.பெண்கள் இப்படி இருந்தால், அவர்களிடம் பொதுமக்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? வன்முறைக்குத்தான் அவர்கள் ஆளாக நேரிடும். இந்த சமூக அவலத்திற்கான காரணத்தை அனைவரும் கண்டுபிடிக்க வேண் டும்.” இவ்வாறு திலீப் கோஷ் பேசியுள்ளார்.