திருவனந்தபுரம்:
கேரள அரசின் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவரும் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்முதுபெரும் தலைவருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ரத்த அழுத்தம் உயர்ந்த நிலையில் வெள்ளியன்றுகாலை உள்ளூர் ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் பினராயி விஜயன் அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். வி.எஸ். அச்சுதானந்தன் உடல்நிலை திருப்திகரமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.