கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவை அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராமச்சந்திரனைக் கண்டித்து தூத்துக்குடி புறநகரில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோப்புத்தெரு கிளைத்தலைவர் கயறு நிஷா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பூமயில் விளக்கிப்பேசினார். புறநகர் தலைவர் சரஸ்வதி, நிர்வாகிகள் பார்வதி, பொம்முத்தாய் ,காளியம்மாள், சங்கரம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.