tamilnadu

img

ஆசிரியர் கூட்டணியின் கல்விப் பாதுகாப்பு பிரச்சாரப் பயணம்

கரூர், செப்.28- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரப் இயக்க பயணம் கரூர் பேருந்து நிலையம் அருகில் துவங்கியது.  தேசியக் கல்விக் கொள்கை-2019 திரும்ப பெற வேண்டும். அரசு பள்ளி களை மூடக் கூடாது, மூடிய பள்ளிகளை திறக்க வேண்டும், தமிழ் வழிப் பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும், தொடக்கக் கல்வித்துறையைச் சீரழிக்கும் அரசாணைகள் 100, 101, 145, 164 ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை மக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் பிரச்சாரப் பயணம் செப்.25-ம் தேதி முதல் துவங்கி 29-ம் தேதி கரூரில் நிறைவடைகிறது. இதனையொட்டி கரூர் பேருந்து நிலையம் முன்பு துவங்கிய பிரச்சார பயணம் குளித்தலை, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், தோகைமலை ஆகிய ஒன்றியங்களில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பெ.காளிதாஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜ.ஜெயராஜ் வரவேற்று பேசினார்.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ச.மயில் சிறப்பு ரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் பேரணியை துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.செல்லமுத்து, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் ஐ.ஜான்பாட்ஷா, ஆசிரியர் கூட்டணியின் மாநில நிர்வாகிகள் வின்சென்ட், ஜீவன்ராஜ், சின்னசாமி, தமிழ்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கரூரில் உள்ள 80 அடி சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை  பிரச்சாரப் பயண நிறைவு பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கும்பகோணம்
திருவிடைமருதூர் பகுதிக்கு வருகை தந்த கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்திற்கு தஞ்சை மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு பணி நிரவல் திட்டத்தினால் அதிர்ச்சியில் காலமான திருபுவனம் ஆசிரியர் லதா இல்லத்திற்கு சென்று ஆசிரியர் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருவிடைமரு தூரிலும், கும்பகோணத்திலும் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் கலைச்செல்வன் தலைமை ஏற்றார். மாநில செயற்குழு உறுப்பி னர்கள் சார்லி கார்த்திகேயன் தேன்மொழி தேசிகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரச்சார இயக்கத்தை மாவட்ட செயலாளர் அழகர் வரவேற்றார் மாநில செயலா ளர் சித்ரா கோரிக்கையை விளக்கிப் பேசினார் மாநிலத் தலைவர் மணிமே கலை சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் மதியழகன் நன்றி தெரிவித்தார்.