tamilnadu

img

இந்திய கப்பற்படை கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் அதிகாரி ஒருவர் பலி

இந்திய கப்பற்படையில் உள்ள விக்ரமாதித்யா கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் டி.எஸ்.சௌகான் என்ற அதிகாரி ஒருவர் பலியானார்.


இன்று கர்நாடகா மாநிலம் கர்வார் துறைமுகத்தை அடைந்து கொண்டிருக்கையில் இந்திய கப்பற்படையின் போர்விமானங்களை சுமந்து செல்லும் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலினுள் ஒருபகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்படின் அதை கட்டுப்படுத்தும் பணியின் தலைமை அதிகாரி லெப்டினண்ட் கமாண்டர் டி.எஸ்.சௌகான் விபத்தை அணைக்கும் பணியில் வீரர்களை ஈடுபடுத்தியுள்ளார். அப்போது உடன் இருந்த அவர் அங்கு ஏற்பட்ட புகையினால் மயங்கி விழுந்துள்ளார். பின்பு அவர் கர்வார் துறைமுகத்திலுள்ள கப்பற்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கப்பற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேசமயத்தில் கப்பலில் தீ அணைக்கப்பட்டது. மேலும், கப்பற்படை தரப்பில் போர்க்கப்பல் விக்ரமாதித்யாவில் தீ ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய அமர்வு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.