tamilnadu

img

ஹிட்லரின் இன அழிப்பு நடவடிக்கை இப்போது இந்தியாவில் நடக்கிறது... பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் வேதனை

சண்டிகர்:
1930-களில் அடால்ப் ஹிட்லர் தலைமையில் இருந்தபோது ஜெர்மனியில் என்ன விஷயங்கள் எல்லாம் நிகழ்ந்ததோ, அவற்றை ஒற்றதாகவே இந்தியாவில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் உள்ளன என்று பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அம்ரிந்தர் சிங் மேலும் கூறியிருப்பதாவது:

இந்த நாட்டில் அனைத்து மத மக்களும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்கள் இந்த நாட்டிற்காக தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். 1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, இந்திய ராணுவ வீரர் அப்துல்ஹமீத், பரம் வீர் சக்ராவை மரணத்திற் குப் பின் பெற்றார்.இந்நிலையில், இந்தியாவின் குடியுரிமையிலிருந்து ஒரு பகுதியினரை பிரிக்கும் வகையில் சிஏஏ சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றிலிருந்து, சுத்தமாக நாம் எந்த பாடங்களையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.குடிமக்கள் அல்லாதவர்கள் என்று முத்திரை குத்தும் அந்த மக்கள் அனைவரும் எங்கே போவார்கள்? அசாமில் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட 18 லட்சம் பேர்களை மற்ற நாடுகள் ஏற்கமறுத்தால் அவர்கள் எங்கே போவார் கள்? இதைப் பற்றி யாராவது யோசித்திருக்கிறார்களா? பாகிஸ்தானைவிட அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட இந்தியா போன்ற ஒரு மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற ஒரு சோகம் நிகழும் என்றுதான் நினைத்துப் பார்த்ததில்லை.

இது 1930-களில் ஹிட்லரின் ஜெர் மனியில் இன அழிப்பு நடந்தது. இப் போது அதே நிகழ்வுகள் இந்தியாவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.இன அழிப்புக்கு எதிராக, அன்று ஜெர்மானியர்கள் பேசவில்லை. பின்னர் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். ஆனால், நாம் இப்போதே பேசவேண்டும்.  பின்னாளில் வருத்தப்படக் கூடாது. நாம் அனைவரும் நம்முடைய சொந்த நலனுக்காக மதச்சார்பற்ற இந்தியாவின் குடிமக்களாக ஒன்றாக வாழ வேண்டும்.இவ்வாறு அம்ரீந்தர் சிங் பேசியுள்ளார்.