நாகர்கோவில், ஜூலை 18- குமரி மாவட்டம் நாகர் கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு போதிய இடம் இல்லாததால் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள தனி யார் பள்ளி, எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, கோணம் அண்ணா பொறியி யல் கல்லூரியில் நோயாளி கள் தங்க வைக்கப்பட்டுள்ள னர். இந்நிலையில் கோணம் அண்ணா பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப் பட்ட நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படாததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு நேரம் வழங்கப்படும் உண வையே மீண்டும் அடுத்த நேரத்திற்கு வழங்குவதாக அவர்கள் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நோயா ளிகள் வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் வீடியோவில் அவர்கள் கூறியதாவது: இங்கு 100 க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் இருக்கின்றோம். குழந்தை கள் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சாப்பாடு ஒழுங்காக தருவதில்லை. அதிகாரிகளிடம் பலமுறை தகவல் அளித்த பின்னரும் அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. மேலும் இங்கு மதியம் வழங்கப்படும் அதே உணவையே இரவும் உண வாக தருகின்றனர். இதனால் சிறு குழந்தைகள் அதனை சாப்பிட முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் இதுகுறித்து கேட்டும் அவர்கள் அதற்கு எவ்வித பதிலும் அளிப்பதில்லை. இதனால் வேறு வழியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என அதில் தெரிவித்துள்ள னர்.