நாகர்கோவில், ஜூலை.23- டாக்டர் கேப்டன் லட்சுமி நினைவு நாளை முன்னிட்டு சுகாதார பணியாளர்களுக்கு பாது காப்பு கேட்டும், 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை யை அதிகரிக்க கேட்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோதநல்லூர் சுகாதார நிலை யம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க தக்கலை வட்டார செயலாளர் குமாரி சுனந்தா தலைமை வகித்தார். வட்டார துணை செயலாளர் சுஜா ஜாஸ்பின் விளக்கவுரையாற்றினார். இதில் குளோறி, சரோஜினி, ராஜகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.