tamilnadu

img

போராட்டங்களை பலவீனப்படுத்த முதலாளிகள் வலதுசாரி சக்திகளை ஊக்கப்படுத்துகிறார்கள்

காஞ்சிபுரம்:
போராட்டங்களை பலவீனப்படுத்த முதலாளிகள் வலதுசாரி சக்திகளை ஊக்கப்படுத்து கிறார்கள் என்று  சிஐடியு அகில இந்தியத் தலைவர் கே.ஹேமலதா குற்றம்சாட்டினார்.காஞ்சிபுரத்தில் தோழர்.பார்த்தசாரதி திடலில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) 14ஆவது தமிழ் மாநில பிரதிநிதிகள் மாநாட்டைத் துவக்கி வைத்து அவர் பேசியதாவது:சிஐடியுவின் 16ஆவது அகிலஇந்திய மாநாட்டை பொறுப்பேற்று நடத்தவிருக்கும் தமிழ்நாடுசிஐடியுவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக தொழி லாளர்கள், காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் வர்க்கம் சிஐடியு மாநிலக் குழு வழிகாட்டுதலின்படி ஏராளமாகத்  தியாகம் செய்துபல போராட்டங்களை நடத்தி யுள்ளார்கள். திரட்டப்பட்ட ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகளில் கூட இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது சமூகப் பாதுகாப்பு மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. தொழிற் சங்கங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுகுறித்து சிஐடியு விரிவாகப் பரிசீலித்து வருகின்றது.நாம் புதிய புதிய சவால்களைச் சந்தித்து வருகின்றோம் தொழிலாளர் வர்க்கம் ஒற்றுமையாய் நிற்கின்றோம், தற்போது உள்ளஅரசு ஆர்எஸ்எஸ் வழிகாட்டு தலின்படி நடைபெற்று வரு கிறது. தொழிலாளர்களின் ஒற்று மையை மதத்தின் பெயரால் பிளவுபடுத்திட பாஜக அரசு முயல்கிறது.
தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சிதைப்பது மட்டுமல்லாமல், வரலாற்றையும் மாற்றி அமைக்கின்ற னர். கலாச்சாரம் குறித்து அறி வியல் பூர்வமற்ற முறையில் பரப்பிவருகின்றனர். 

நோட்டீஸ் கொடுப்பது,  போராட்டம் நடத்துவதற்கு கூட பாஜக அரசு அனுமதிப்பதில்லை. அரசாங்கத்தின் கருத்திற்கு ஒத்துப்போகவில்லை என்றாலும், எதிர்க் கருத்து பேசினாலும்  நக்சல்கள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும் முத்திரை குத்தப்படுகின்றனர். தொழிலாளர் உரிமை தொழிற்சங்க உரிமை  அனைத்தையும்  பறித்துவிட பாஜக அரசு துடிக்கின்றது. அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியத் தொழிலாளர்கள் நவீன தாராளமயத்தால் பல்வேறு தாக்குதல்களைச் சந்தித்து வருகின்றனர். வலதுசாரி பிற்போக்கு சக்திகள் இந்துத்துவா கொள்கையை நம்மீதுதிணிக்கின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தைப் பலவீனப்படுத்துவதே அவர்களின் நோக்கம்இத்தகைய சவால்கள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கம் இத்தகைய தாக்குதலைச் சந்தித்து வருகின்றது. உலகளவில் வேலையின்மை, ஊதிய குறைப்பு, ஓய்வூதிய குறைப்பு, சங்கம் வைக்கும் உரிமை எல்லாம் பறிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு நிரந்தரவேலை என்பது மறுக்கப்படு கின்றது.  அதற்குப் பதிலாகத் தற்காலிக பணிகள் அதிகரித்து வருகின்றது. இதை உலகளாவிய நிகழ்ச்சியாகவே பார்க்க வேண்டும்.

போராட்டங்களைப் பலவீனப்படுத்தப் பெருமுதலாளிகள் வலதுசாரி சக்திகளை ஊக்குவிக்கின்றனர். ஏன் வலதுசாரிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்றால் நவீனதாராளமயத்திற்கு மாற்று அவர்களிடம் இல்லை. தாராளமயத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்திஏற்படுகின்றது. அந்த அதிருப்தியை மாற்ற வலதுசாரிகள்தான் சரியானவர்கள் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்குள் இரண்டுபிரிவுகளாகப் பிரிந்து ஒரு பிரிவின்பாதிப்புக்கு மற்றொரு பிரிவுதான் காரணம் என்று திசை திருப்புகின்றனர். முஸ்லீம் சிறுபான்மையினர் வேலை வாய்ப்பு பெறுவதால் மற்றொரு பிரிவினர் பாதிக்கப்படுவதாகவும் பிரச்சாரம்செய்கின்றனர். இட ஒதுக்கீட்டால்தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்
படுவதால், இதர பகுதியினருக்கு வேலை வாய்ப்பு பறிபோவதாக மற்றொரு பகுதி மக்களைத்திசை திருப்புகின்றனர். இதுவே வலது சாரிகளின் வேலையாக இருக்கிறது.

100 ஆண்டுகள் போராடிப் பெற்ற சட்டங்களை 100 நாளில் ஒழிக்கமுயல்கின்றனர். இந்தியத் தொழி லாளர்களை நவீன அடிமைகளாக மாற்றத் துடிக்கின்றனர். நாடாளு மன்ற தேர்தலுக்கு முன் நடை பெற்ற ஏராளமான வேலை நிறுத்தப் போராட்டங்களில்  சிஐடியு முன்னணி பத்திரமாக இருந்துள்ளது. இதுதவிர துறைவாரியாகவும்  போராட்டங்களை  தனித்தனியாக நடத்தியிருக்கின்றோம். மத்திய மாநில அரசு ஊழியர்கள் போரடியுள்ளனர்.இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் உள்ள இளம் தொழிலாளர்களைத் திரட்ட வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான வாய்ப்புகளும் உள்ளது. சிஐடியுவின் நோக்கங்களையும், கொள்கைகளையும் இளம் தொழிலாளர்களி டமும் மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். அதன்மூலம்  சுரண்டல் அமைப்பை  எதிர்த்து, சோசலிச பாதையை நோக்கிய பயணத்தை நாம் தொடங்குவோம்.இவ்வாறு ஹேமலதா பேசினார்.