காஞ்சிபுரம், அக்டோபர்.10- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி சிஐடியு தலைவர்களைச் சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யும் காவல்துறையின் செயலுக்குக் கண்டனங்கள் எழும்பி வருகின்றன.
சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முத்துக்குமாரை காலை 11 மணியளவில் சுங்குவார்சத்திரம் பைபாஸ் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரைப் பார்ப்பதற்கு காவல்துறை ஆய்வாளரின் அனுமதியுடன் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்குச் சென்ற சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசனையும் காவலில் வைத்து காவல்துறையினர் அராஜகமாகச் செயல்பட்டுள்ளது.