கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவருமான தோழர் எம்.சின்னப்பா மறைவுக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் அமைந் துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை-1 இயக்குனராக செயல்பட்டு வந்தவர். கரும்பு விவசாயிகளின் அன்றாட பிரச்சனைகளில் தலையிட்டு வழிகாட்டி வந்தவர். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு விவசாயம் அபிமானம் பெற்ற தலைவராக விளங்கியர் தோழர் சின்னப்பா.அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் மத்தியக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். அவரது மறைவு விவசாயிகள் இயக்கத்திற் கும், கரும்பு விவசாயிகளின் அமைப் பிற்கும் பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு அஞ் சலியை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை உரித் தாக்கிக் கொள்கிறோம்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராகவும், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1 சங்கத்தின் நிர்வாகியாகவும் பணியாற்றி வந்த தோழர் ஜனார்த்தனன், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து அனைத்து தரப்பு விவசாயிகளின் மேம்பாட்டிற் காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.இவர்களின் இருவரின் மறைவுச் செய்தி அறிந்த கரும்பு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் அகில இந்திய செயலாளர் என்.கே.சுக்லா, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணை செயலாளர் விஜூ கிருஷ்ணன் ஆகியோர் இரங் கல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.