கடலூர், செப்.26- கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை விலிறுத்தி டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்பபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் சிப்காட் வளா கத்தில் டாஸ்மாக் குடோன் செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு இங்கிருந்து மதுபானங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மது பானங்களை லாரியிலிருந்து இறக்குவதும், ஏற்றி அனுப்பு வதற்கும் 60 க்கும் மேற் பட்ட சுமைப்பணி தொழிலா ளர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்பட வில்லை. இ.பி.எப், இஎஸ்ஐ திட்டங்களுக்கு தொழிலாளர்களின் சம்ப ளத்தை கணக்கிட்டு முழு தொகையும் செலுத்தாமல் குறிப்பிட்ட தொகையை மட்டுமே செலுத்துகின்றனர். அதற்கும் உரிய ரசீது வழங்கு வதில்லை. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் பலனில்லை. இதனால், வியாழக்கிழமை (செப்.26) காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஐடியு மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன், சிஐடியு மாவட்டத் தலைவர்கள் வி.சுப்புராயன், ஆர்.ஆளவந்தார், வி. திருமுருகன், சுமை பணி சங்கத்தின் தலைவர் என்.முருகன் செயலாளர் எம். தண்டபாணி, நிர்வாகிகள் சுந்தர், மோகன், வெங்க டேசன், பிரகாஷ், கோவிந் தன், கருணைநிதி, சரவணன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.