tamilnadu

img

விளக்குகள் பறிமுதல்

 கடலூர். டிச. 25- உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு வினி யோகம் செய்ய கொண்டு செல்லப்பட்ட காமாட்சி அம்மன் விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. உள்ளாட்சித் தேர்த லுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் புதனன்று(டிச.25)  மாலை 5 மணியுடன் நிறை வடைந்தது. இந்நிலையில், கடலூர் ஆள்பேட்டை சோதனைச் சாவடி யில் தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் கீதா தலைமையில் வாகன  தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது பாண்டிச்சேரியிலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு ஷிப்ட் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி  1300 பித்தளை காமாட்சியம்மன் விளக்குகள் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 3 லட்சத்து 30 ஆயிரமாகும்.