tamilnadu

மழையால் 2,861 ஏக்கர் விவசாயப் பயிர் பாதிப்பு

கடலூர், ஜன. 29- கடலூர் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு  இறுதியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட  2,861 ஏக்கர் விவசாயப் பயிர்களுக்கு இடு பொருள் மானியம் வழங்க பரிந்துரைக்கப்  பட்டுள்ள தாகவும் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் வரையில் பெய்தது. இதில், நவம்பர் மாத  இறுதியில் பெய்த அதிகப்படியான மழை யால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி யது. தண்ணீர் விரைந்து வடிவதற்கான வாய்ப்புகள் ஏற்படாததால் வேளாண் பயிர்கள் அழுகும் நிலை உருவானது. எனவே,  வேளாண்மைத்துறை மற்றும் வரு வாய்த்துறையினர் பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென விவசாயி கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலை யில், உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு  வெளியானதைத் தொடர்ந்து இப்பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு அதன் விபரம் வெளி யிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில்  நெற்பயிர் 1,452 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ள தாகவும், மணிலா 1,409 ஏக்கர் பாதிக்கப்பட்டி ருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது. எனவே, பாதிக்கப்பட்ட 2,990 விவசாயி களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இடுபொருள் மானிய உதவித் தொகை  வழங்க அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்து ரைத்துள்ளது. இதில், உதவித்தொகையாக ரூ.1.54 கோடி வழங்கிட பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக ஆட்சியரக வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. தற்போது கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்  பட்டுள்ள 2,861 ஏக்கர் நிலங்களுக்கும் பயிர்  காப்பீட்டுத் தொகை கிடைக்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வேளாண்மைத்துறை வட்டாரங்கள் தெரி வித்தன.