ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் ஆர்எஸ்எஸ்தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் (கான்வாய்) மோதியதில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு ‘இசட்ப்ளஸ்’ பாதுகாப்பு பெற்றவர்ஆவார். இந்நிலையில், மோகன் பகவத், புதன்கிழமையன்று ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டம், திஜாரா அருகேயுள்ள ககன்கார் கிராமத்தில் துறவி பாபாகமல்நாத்தைச் சந்தித்துள் ளார். பின்னர் அந்த நிகழ்ச்சிமுடிந்து ஆல்வார் நகருக்குத்திரும்பியுள்ளார். அப்போதுமோகன் பகவத் பாதுகாப் புக்காக, முன்னும் பின்னுமாக எட்டு முதல் பத்து கார்கள் பின்தொடர்ந்து வந்துள்ளன.இந்நிலையில், திஜராஅருகே, மோகன் பகவத்தின்பாதுகாப்புக்கு வந்த ஒருகார், தாத்தாவுடன் இரு சக்கர வாகனத்தில் சாலையோரத்தில் சென்றுகொண்டிருந்த 6 சிறுவன் மீது மோதியுள்ளது. இதில், சிறுவன் தூக்கி வீசப்பட்டு, சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளான். சிறுவனின் தாத்தா படுகாயம் அடைந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள் ளார்.விபத்து தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவுசெய்திருந்தாலும், வாகனப்பறிமுதல் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளது.