tamilnadu

img

தங்கம் விலை தொடர் அதிகரிப்பு

சென்னை, செப். 2- கடந்த ஒரு மாத காலமாகவே தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் இதுவரை இல்லாத வகையில் 30 ஆயிரம் ரூபாயை நெருங்கி விற்பனை யாகி வருகிறது. இந்நிலையில் திங்க ளன்றும் தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 616 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 11 ரூபாய் உயர்ந்து மூவா யிரத்து 702 ரூபாய்க்கு விற்பனை யாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 52 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 400 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை யாகிறது.