tamilnadu

img

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தற்கொலை

அமெரிக்காவின் நியூயார்க் பிரெஸ்பைடீரியன் மருத்துவ மனையின் கொரோனா அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய லோர்னா பிரீன் என்ற பெண் மருத்துவர், தமது கண் முன்பே கொரோனா பாதிப்பினால் காப்பாற்ற முடி யாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற் கொலை செய்து கொண்டார்.

மருத்துவர் லோர்னா ப்ரீன் ஞாயிற்றுக் கிழமை உயிரை மாய்த்துக் கொண்டதாக அவரது தந்தை டாக்டர் பிலிப் ப்ரீன் நியூ யார்க் டைம்சிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக இவரது வேதனையைப் புரிந்து கொண்ட மருத்துவமனை நிர்வாகம் இவரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறி விடு வித்துள்ளது. தாய், சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து மன வேதனையில் இருந்ததாகவும் யாருடனும் சரியாகப் பேசாமல் இருந்ததாகவும் கூறப் படுகிறது.

நியூயார்க் மருத்துவமனைகளின் அவ சர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்து வர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழி யர்கள் கடும் அவதிக்கும், மன உளைச்சலுக் கும் ஆளாகி வருகின்றனர்.  இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் லோர்னாவை ‘ஹீரோ’ வாகக் கொண்டாடுங்கள் என அவரது தந்தை கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இறந்தது மற்றவர்களுக்கு நேரிட்டது போல் ஒரு விபத்து என்றார். மேலும் அவர் கூறு கையில் எனது மகள் உண்மையிலேயே கொரோனாவை தடுப்பதில் முன்னணி தள பதியாக இருந்தாள் அவள் தன் வேலை யைச் செய்ய முயன்றாள், அது அவளைக் கொன்றது என்றார்,

கொரோனா வைரஸ் அவசரகால மருத்துவர்கள் மற்றும் அவர்களோடு பணி புரிபவர்களுக்கு மனநலம் சார்ந்த சவால் களை முன்வைக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 300 மருத்து வர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.