tamilnadu

img

பிப்.13-ல் தொடர் முழக்கப் போராட்டம்

காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு

தஞ்சாவூர், பிப்.1- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், காவிரி டெல்டாவை பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியு றுத்தி பிப்.13 டெல்டா மாவட்டங்க ளில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு செய்துள் ளது. காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாநில பொதுச்செய லாளர் வே.துரைமாணிக்கம் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண் முகம் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் துறை முன் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும், பொதுமக்களிடம் கருத்து கேட்பு அவசியமில்லை என்றும் மத்திய அரசு ஜனவரி 16 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ள தற்கு இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சி யம் என்று போற்றப்படும், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத் தப்பட்டால், இப்பகுதி பாலைவனமாகி விடும் அபாயம் உள்ளது. நிலம், நீர், சுற்றுச்சூழல் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப் படும். எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்தியது.

கார்ப்பரேட் முதலாளி களுக்கு ஆதரவாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை கண்டித்தும், காவிரி டெல்டாவை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்க வலியுறுத்தி யும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்ட தலைநகரங்க ளில் பிப்ரவரி 13 அன்று தொடர் முழக்க போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டது. மேலும், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கக் கூடிய வகையில் அரசு நட வடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் போது, சென்னை கோட்டை முன் போராட்டத்தில் ஈடுபடுவது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது. நமது மண்ணையும், வாழ்வாதாரத் தையும் பாதுகாப்பதற்காக நடை பெறும் இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்குமாறு வேண்டு கோள் விடுக்கிறது" இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

கூட்டத்தில் அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கே.பாலகிருஷ்ணன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் (விசிக) பசுமை வளவன், விவசாயிகள் போராட்ட கூட்டமைப்பு வலிவலம் மு.சேரன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஏ.பி.ரவீந்திரன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கடலூர் இளங்கீரன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்கம் பொறியாளர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்கம் எஸ்.பழனிராஜன், தமிழர் தேசிய முன்னணி அய்யனா புரம் சி.முருகேசன், விவசாயி கள் சங்க கூட்டமைப்பு மிசா மாரிமுத்து, தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செய லாளர் பி.எஸ்.மாசிலாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.