tamilnadu

img

டெல்டா பாசனத்துக்கு கல்லணை திறப்பு

தஞ்சாவூர், ஆக.17- காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் சனிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப் பட்ட உபரி நீரால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து கடந்த 13 ஆம் தேதி மேட்டூர் அணை யிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் சனிக்கிழமை காலை கல்ல ணைக்கு வந்தது. இதைதொடர்ந்து  கல்லணையிலிருந்து காவிரி, வெண் ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளி டம் ஆகிய ஆறுகளுக்கு பகிர்ந்து சனிக் கிழமையன்று தண்ணீர் திறக்கப்பட்டது.  

முன்னதாக கல்லணையில் அதிகாரி கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகி யோர் தாரை தப்பட்டையுடன் ஊர்வல மாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தி காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறு களில் தண்ணீரை திறந்து விட்டனர். முதற்கட்டமாக வினாடிக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய ஆறு களில் தலா 1000 கன அடியும், கல்ல ணைக் கால்வாயில் 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகு படிக்கு கல்லணையில் தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. தற்போது பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி செய்துள்ள 1 லட்சம் ஹெக்டேருக்கும், சம்பா சாகுபடி செய்யவுள்ள  4 லட்சம் ஹெக்டேருக்கும் இந்த தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். மேட்டூரிலிருந்து தண்ணீர் வரத்தை பொறுத்து நீர் நிலைகளுக்கு தண்ணீர் விட்டு சேமிக்கப்படும். இந்த தண்ணீரை விவசாயிகளும், பொது மக்களும் சிக்கமாக பயன்படுத்த வேண் டும். சில இடங்களில் குடிமராமத்து பணி களும் தூர்வாரும் பணிகளும் நடைபெறு கிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள தண் ணீர் அந்தந்த பகுதிக்கு செல்வதற்குள் அப்பணிகள் முடிக்கப்பட்டு விடும் எனத் தெரிவிக்கப்பட்டது.