tamilnadu

பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

திருப்பூர், ஜூலை 14 - மடத்துக்குளத்தில் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 10 ஆண்டு கால தண்டனை வழங்கி மாவட்ட  மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து(26). கூலித் தொழிலாளி யாக வேலை செய்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த வனிதா  (24) எனும் பெண்ணிடம், தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த வனிதா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று,  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து, குமரலிங்கம் போலீசார் வழக்குபதிவு செய்து மருதமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  திங்களன்று இந்த வழக்கில் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார். இதில் மருதமுத்துவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.