tamilnadu

img

கொரோனா பாதிப்பு நிவாரணம் கோரி தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை,ஜூன் 9-  கொரோனா தொற்று நோய் பாதிப்பு மற்றும் ஊர டங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி யாக நிவாரணம் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் ஜூன் 9 செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

கொரோனாவிற்கு  முன்பாகவே பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல்  நான்கு மணி நேர அவகாசத்தில்  அறி விக்கப்பட்ட ஊரடங்கு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அனைத்துப் பகுதி மக்களும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பிரதமரும் மத்திய அரசும் படாடோபமான வார்த்தைகளைத் தவிர உண்மை யில் மக்களுக்குத் தேவையான நிவாரணம் அளிக்கும் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. எனவே கொரோனா பாதிப்பு நிவாரணத்தை உடனடியாக வழங்கக்கோரி ஜூன் 9 அன்று நாடு முழுவதும் இயக்கம் நடத்த இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்தன.    இந்த அறைகூவலை ஏற்று தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ)  ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் செவ்வாய்க் கிழமையன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங் களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு பேசி னர். இதில் ஏராளமானோர் பங்கேற்று முழக்கம் எழுப்பினர். 

சென்னை

சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் தலைமையில் தனிமனித இடைவெளி யுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், ப.செல்வசிங், மாநிலக் குழு உறுப்பினர்கள் வெ.ராஜசேகரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்

சிதம்பரத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,மாநிலக்குழு உறுப்பினர்  மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, கீரை ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் தமிமுன்அன் சாரி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்  சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.