இந்தாண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த 6 ஆம் தேதி துவக்கி வைத்தார். அதன்பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார். ஒரே நாளில் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.