சென்னை, நவ. 1- அரசுமுறை பயணமாக வருகிற 7 ஆம் தேதி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமெரிக்கா செல்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு 8835 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், தமிழகத்தில் புதிதாக 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உரு வாகும் என முதல்வர் பழனிசாமி தெரி வித்திருந்தார். இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாள் பயணமாக வரும் 7ஆம் தேதி அமெரிக்காவுக்கு புறப் படுகிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது சிகாகோ உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் அவர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் அமெரிக்கா செல்கிறார்.