குஜராத்தின் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சார்த்தனா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வந்த டுடோரியல் பயிற்சி சென்டரில் நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கண்டு அதிர்ச்சியடைந்த பல மாணவர்கள் மாடியிலிருந்து கீழே குதித்தனர். அதில் பலருக்கு காயம் பலமாக ஏற்பட்டு உள்ளது. மேலும் சிலர் தீயில் கருகி உயிர் இழந்து உள்ளனர். இதுவரை 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டுடோரியல் பயிற்சி சென்டர் நடத்தி வந்த பார்கவா பூட்டானி மற்றும் வணிக வளாகம் உரிமையாளரான ஹர்ஷல் வக்காரியா மற்றும் ஜின்னெஷ் ஆகியோரின் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.