tamilnadu

img

சென்னை அணியிலிருந்து கேதார் ஜாதவ் நீக்கம்?

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றிபெற்றது. சென்னை அணி பீல்டிங் செய்தபோது அந்த அணியின் ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவிற்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதையடுத்து அவர் உடனடியாக ஓய்வறை க்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். ஜாதவ் காயம் குறித்து சென்னை பயிற்சியாளர் பிளெமிங் கூறுகையில்,”காயம் காரணமாக கேதார் ஜாதவ் மீண்டும் ஐபிஎல்போட்டியில் பங்கேற்பார் என எண்ண வில்லை. அவருடைய கவனம் முழுவதும் உலகக் கோப்பை தொடரில் இருப்பதால், நல்ல உடற்தகுதியுடன் பங்கேற்பது முக்கியமானது.காயம் தீவிரமாக இல்லை யென்றாலும் அவரின் நிலை சரியாக இல்லை” என்று கூறி யுள்ளார்.கேதார் ஜாதவ் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதால் அவருடைய காயம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.பிசிசிஐ அமைதி காப்பதை உற்றுநோக்கினால், ஜாதவை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கி, உலகக்கோப்பைக்கு உடல் தகுதியை நிரூபிக்கத் தனி மருத்துவச் சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.