சத்தியமங்கலம், மார்ச் 21- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமி ழகம் மற்றும் கர்நாடகா மாநில அரசு பேருந்துகள் நிறுத் தப்பட்டதால் புளிஞ்சூர் சோதனைச்சாவடி பகுதியில் சாலை வெறிச்சோடியது. தமிழகத்திலிருந்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூர், பெங்களுரு, கொள்ளேகால் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சத்தியமங்கலம் வழியாக தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கர்நாடக மாநில அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சத்தியமங்கலம் வழி யாக இரு மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு பேருந்துகள் கடந்த வியாழனன்று முதல் நிறுத்தப்பட்டன. இதன்காரணமாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாநில எல்லையில் உள்ள கர்நா டகா மாநிலத்திற்கு சொந்தமான புளிஞ்சூர் சோதனைச் சாவடி பகுதி போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப் பட்டது. இரு மாநில அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.