tamilnadu

நிலுவையில் உள்ள வரிகளை செலுத்த மாநகராட்சி எச்சரிக்கை

ஈரோடு, மார்ச் 8- ஈரோட்டில் நிலுவையில் உள்ள வரி யினங்களை செலுத்தாவிட்டால் சட்ட  ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படு மென மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள் ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு மாநக ராட்சிகளில் 2019-20 ஆம் ஆண்டிற்கான வரியினங்களில் நிலுவையிலுள்ள சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் வரி மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வரி உள்ளிட்ட வரிகளை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். இதை செலுத்தாமல் காலம் கடத்தி வருபவர்களின் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு போன்றவை துண்டிக்கப்படும் என்றார். மேலும், அவர்கள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.