tamilnadu

img

இலவச கண் பரிசோதனை முகாம்

ஈரோடு, டிச. 8- ஈரோடு சிஐடியு அலுவலகத்தில் இலவச கண் விழித் திரை பரிசோதனை முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. வொர்கர்ஸ் எஜுகேசன் டிரஸ்ட், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு), ஈரோடு அரசு கண் மருத்து வமனை, மருந்து மற்றும் விற்பனை பிரநிதிகள் சங்கத்தி னர் இனைந்து ஈரோடு சிஐடியு அலுவலகத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலசவ கண் விழித்திரை பரிசோதனை முகாமை நடத்தினர். இந்நி கழ்விற்கு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் மாநில பன்முகத் தலைவரும், மாநில துணைத்தலைவ ருமான என்.முருகையா தலைமை வகித்தார். இதில், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், உடல்பருமனாக இருப்பவர்களுக்கும், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டனர்.  முன்னதாக இம்முகாமில் போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜான்சன் கென்னடி, மருந்து மற்றும் விற்பனை பிரதநிதிகள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.எம்.ஆர்.கார்த்திகேயன், மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் இளங்கோ, மணி, சிவா, மாதவன் உட்பட திரளா னோர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமை அரசன் கண் மருத்துவமனை ஊழியர் இளங்கோ ஏற்பாடு செய்தி ருந்தார்.