tamilnadu

மலிவான விளம்பரம் தேடும் அமைச்சர் சீனிவாசன்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திண்டுக்கல்
மலிவான விளம்பரம் தேடுவதை அதிமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கை:திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் முன்னிலையில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் இணைந் தார்கள் என்று ஒரு தினசரி பத்திரிக்கையில் திங்களன்று செய்தி வெளியாகியுள்ளது.

பாஜக ஒரு புறம் ரவுடிகளை கட்சியில் சேர்த்துசட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கிறது. இன்னொரு புறம் திமுக, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எல்லாம் விலகி அதிமுகவில்; அமைச்சர் சீனிவாசன் தலைமையில் சேர்ந்துவிட்டதாக பத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிமுகவில் எந்த பணியும் நடைபெறவில்லை என்றால் இப்படி தெருவிற்கு பத்து பேரை அழைத்து வந்து பிறகட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்சியில் இணைந்தார்கள் என்று செய்தி வெளியிடுவதை வழக்கமாக் கொண்டுள்ளது அதிமுக. நாங்கள் தான் பெரிய கட்சி என்று சொல்லிக்கொண்டுள்ள அதிமுக தேர்தல் நெருங்க நெருங்க இது போன்ற மலிவான விளம்பரங்களை தேடிக்கொள்ளுவதை அனைவரும் அறிவார்கள். அப்படி ஒரு விளம்பரம் தேடிக்கொள்ளும் செய்தி தான்திண்டுக்கல் அந்தோனியார் தெருவில் வசிக்கும் மக்களை அழைத்துச் சென்று கட்சியில் இணைந்ததாக வெளிவந்துள்ள செய்தி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒவ்வொரு ஆண்டும் கட்சி உறுப்பினர்களை புதுப்பிக்கிறது. கட்சி விரோதமாக செயல் படுபவர்களை நீக்குகிறது. திங்களன்று; வெளிவந்த அந்தச் செய்தி குறித்து விசாரித்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அதிமுகவில்இணையவில்லை என்பது தெரியவந்துள்ளது.வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தனது கட்சியில் உள்ள கோஷ்டிப் பூசலை சமாளிக்கவும், தான் செயல்படுவதாக காட்டிக்கொள்ளவும் வேண்டிய கட்டாயம் இருப்பதால் இது போன்று விளம்பரம் தேடிக்கொள்கிறார். அதிமுக மற்றும் அமைச்சரின் இத்தகைய செயல் வன்மையான கண்டனத்திற்குரியது, வனத்துறை அமைச்சர் தனது சொந்த ஆதாயத்திற்காக இது போன்ற மலிவான விளம்பரம் தேடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.