தருமபுரி, ஜன. 9- தருமபுரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந் தரவு கொடுத்த இரு பட்டதாரி ஆசிரியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம், மகேந்திர மங்கலம் அருகே உள்ள ஜக்கசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் அதே பகுதி யைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியை அதே பள்ளி வர லாறு ஆசிரியர்களாக பணியாற்றும் லட்சுமணன் (38), சின்னமுத்து (34) ஆகிய இருவரும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். மேலும், இதை வெளியே யாரிடமாவது சொன்னால் உன் வாழ்க்கையை சீரழித்து விடுவேன். மதிப்பெண் குறைத்து விடுவேன் என மிரட்டியதால் இது பற்றி மாணவி வீட்டில் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். மேலும், புதனன்று ஆசிரியர்கள் குடிபோதையில் பள்ளிக்கு வந்து மாணவியிடம் எல்லை மீறி நடக்க முயற்சி செய்தனர். விபரீதத்தை புரிந்து கொண்ட மாணவி தன் தாயிடம் நடந்தவற்றை கூறி உள்ளார். இந்த சம்ப வம் ஊர் மக்களுக்கு தெரியவரவே 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் கேட்டனர். ஆசிரியர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததால் தலைமை ஆசிரியர் முருகேசனிடம் முறையிட்டனர். தலைமை ஆசிரியர் சரியான பதில் கூறாததால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் இரு ஆசிரியர்களையும் சரமாரி யாக தாக்கியுள்ளனர். தகவலறிந்த மகேந்திர மங்கலம் போலீசார் இரு ஆசிரியர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் மகேந்திர மங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என போராட்டம் ஈடு பட்டனர். பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்ற னர். பாதிக்கப்பட்ட மாணவியை பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணனிடம் கேட்டபோது, விசாரித்து வருகி றோம். 2 ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியில் மல்லு பட்டி மேல்நிலைப் பள்ளி யில் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத் தக்கது. பள்ளி மாணவிக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோர் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.