tamilnadu

img

வங்கிகளில் சிசிடிவி கேமரா பொறுத்திடுக டி.எஸ்.பி செல்லப்பாண்டியன் அறிவுறுத்தல்

தருமபுரி, ஜன.23- அரூரில் இயங்கி வரும் வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சிசிடிவி கேமரா மற்றும் செக்யூரிட்டி அலாரம் பொருத்த வேண்டுமென டிஎஸ்பி ஏ.சி.செல்லபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம், அரூரில் உள்ள தனியார் திருமண  மண்டபத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் செல் லபாண்டியன் தலைமையில் செயல்முறை கூட்டம் வியா ழனன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செல்லப்பாண் டியன் பேசுகையில், வங்கியில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் செக்யூரிட்டி அலாரம் சரியாக இயங்குவது கிடையாது. எனவே யூபிஎஸ் மூலம்  மின்சாரம் இல்லாத நேரத்திலும் செக்யூரிட்டி அலாரம் இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  இரவு நேரங்களில் பாதுகாவலர்களை சுழற்சி முறையில் அமர்த்த வேண்டும். மிகவும் பாதுகாப்பான உறுதியான பெட்ட கங்களில் பணம் மற்றும் தங்க நகைகளை  வைக்க வேண்டும்.  வட மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை கண்கா ணித்து தவறுகள் ஏதும் நடக்கும் பட்சத்தில் முன்னெச்ச ரிக்கையாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.  இக்கூட்டத்தில் வங்கி மேலாளர்கள், ஊழியர்கள், கூட்டு றவு தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.