tamilnadu

img

தருமபுரியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கே.பாலகிருஷ்ணன் ஏப்.7ல் பிரச்சாரம்

தருமபுரி, ஏப்.1- தருமபுரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரூர் செ.கிருஷ்ணகுமார், பாப்பிரெட்டிப்பட்டி ஆ.மணி ஆகியோரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் ஏ.சவுந்தரராஜன் ஆகியோர் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர். ஏப்.6 ஆம் தேதி தருமபுரியில் நடைபெற உள்ளதேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஏ.சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசுகிறார். ஏப்.7 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பென்னாகரத்திலும், மாலை6 மணிக்கு அரூரிலும் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். இந்த பிரச்சார கூட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ, பென்னாகரம் எம்.எல்.ஏ பி.என்.பி.இன்பசேகரன் மற்றும் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.