tamilnadu

img

பொதுத்துறையை தனியார்மயமாக்காதே இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜன.9- பொதுத்துறையை தனியார்மயமாக் காதே என இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவ னங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நடவடிக்கைகளை கைவிடக்கோரி புதனன்று மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதன் ஒரு  பகுதியாக இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் முகவர் சங்கத்தினர் தருமபுரி எல்ஐசி  கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் சந்திரமெளலி தலைமை  தாங்கினார். சேலம் கோட்ட இணை செய லாளர் ஏ.மாதேஸ்வரன், கிளைச் செய லாளர் மகேந்திரன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மண்டல இணைச்செயலாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, லிகாய் முகவர் சங்க மாவட்டத் தலைவர் கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் ரமேஷ், லட்சுமண ராவ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் எல்ஐசி கோட்ட மேலாளர் அலு வலகம் முன்பு இன்சூரன்ஸ் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு கழக  ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.நரசிம்மன்  தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.தர்மலிங்கம், கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் டி.குருசாமி, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் எஸ்.ஏ.ராஜேந்திரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் கோபால், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.முருகப்பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.