tamilnadu

img

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவேன் தருமபுரி எம்.பி. எஸ்.செந்தில்குமார் உறுதி

தருமபுரி, மே 24-தருமபுரி நாடாளுமன்ற தொகுதிமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவேன் என்று தருமபுரி எம்.பி. மருத்துவர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்தார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி இராமதாசை விட 70ஆயிரம் வாக்குகள் ஆதிகம் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் எஸ்.செந்தில்குமார் கூறுகையில், தருமபுரி நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை, மறைந்த திமுகதலைவர் கருணாநிதி மற்றும் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின்ஆகியோருக்கு காணிக்கையாக்குகிறேன். எனது வெற்றிக்கு காரணமாகஇருந்த திமுக மற்றும் தோழமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.இத்தொகுதியில் முன்னர் எம்.பி.யாக இருந்த அன்புமணிஇராமதாஸ் கடந்த ஐந்தாண்டுகளில், எவ்வித வளர்ச்சிப் பணிகளையும் தொகுதியில் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே,எதிர்காலத்தில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சிக்கு, எங்களது கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மற்றும்வழிகாட்டுதல்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன். பொதுமக்களின் அடிப்படைபிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர்கூறினார்.