பென்னாகரம், அக்.3- விவசாயத்தைப் பாதுகாக்க தடுப் பணைகள் கட்டப்பட வேண்டுமென விவ சாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிக்கிலி ஊராட்சியில் 12க்கும் மேற்பட்ட கிரா மங்கள் உள்ளன. இங்கு சுமார் 7 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். இந்த ஊராட்சியில் பத்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் ராகி, நிலக்கடலை, கொய்யா போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், பஞ்சபள்ளி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் சின்னாறு வழியாக தண்டுகாரன்அள்ளி கிராமத்திற்கு செல்கிறது. இப்பகுதியிலுள்ள கூட்டாறு அருகே தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். கூட்டாறு அருகே தடுப்பணை சுமார் 100 அடி உயரத்தில் 5 கிலோ மீட்டர் நீளம் மற்றும் இரண்டு கிலோ மீட்டர் அகலத் திற்கு தண்ணீர் தேங்கினால், தண்டு காரன்அள்ளி பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயனடையும். மேலும் பிக்கிலி ஊராட்சியில் நிலத்தடி நீர் உயரும், குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். ஏரி, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு களில் நீர் வளம் உயரும் என விவ சாயிகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டு மின்றி பனைக்குளம், திருமல்வாடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளும் இதன்மூலம் பயனடைவர் என தெரிவிக் கின்றனர். அதேபோல் பாலக்கோடு ஊராட்சி பகுதியும் பயனடையும் என விவ சாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பாப்பாரப்பட்டி பகுதி தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.சின்னசாமி கூறுகையில், கூட்டாறு அருகே தடுப்பணை கட்டப்பட்டால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறும். மேலும் நிலத்தடி நீர் உயரும். தற் போது ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். இந்தப் பகுதி ஒரு சுற்றுலா தலமாகவும் மாறும் வாய்ப்புள்ளது. இத னால் ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கும். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என தெரிவித்தார். எனவே தமிழக அரசு கூட்டாறு அருகே தடுப்பணை கட்டப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.