tamilnadu

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

பென்னாகரம், மார்ச் 12- பென்னாகரம் அருகே உள்ள வனப் பகுதியில் ஆடு மேய்க்க சென்ற விவசாயி யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரி ழந்தார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள வண்ணாத்திபட்டியை சேர்ந்தவர் முருகேசன் விவசாயி (48).  இவர்   செவ்வாயன்று  தாசம்பட்டி சின்னாறு வனப் பகுதி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந் தார். அப்போது  ஆடு ஒன்று வனப்பகுதிக்கு சென்றுள்ளது. இதனால் ஆட்டை தேடி  வனப்பகுதிக்கு சென்ற முருகேசனை வனப் பகுதியில் மறைந்திருந்த யானை  தாக்கி யதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந் தார்.  இந்நிலையில் வனப்பகுதியில்  ஆடு  மேய்க்க சென்ற முருகேசன் வீடு திரும்பாத தால் அவரது உறவினா்கள் அவரை  தேடி சென்றபோது, சடலமாக கிடப்பதை  கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதை யடுத்து அவரது உடலை மீட்டு பென்னா கரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பிவைத்தனா்.  உயிரிழந்த முருகேசனுக்கு சஞ்சீவி என்ற மனைவியும், 2 மகன், ஒரு மகளும் உள்ளனர்.  தற்போது ஒகேனக்கல் வனப்பகுதியில் மரங்கள் காய்ந்து கிடப்பதால் யானைகள் உணவு இல்லாமல் வனப்பகுதிலிருந்து வெளியேறிவருவது வாடிக்கையாகி வரு கிறது. வனப்பகுதிகளை ஒட்டியுள்ள மக் களுக்கு முறையாக விழிப்புணா்வை வனத் துறையினர் ஏற்படுத்தி  உயிரிழப்புகளை தடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.