tamilnadu

தருமபுரி: கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

தருமபுரி, ஜூலை 9- தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்ட மற்றொருவர் உயிரிழந்தது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியில் கொரோனா பாதிப்பே இல்லாத மாவட் டமாக இருந்த நிலையில், தற்போது அதன் பாதிப்பு படிப்படி யாக அதிகரித்து 200-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், சீனி வாசன்(46) என்பவர் கடந்த இருதினங்களுக்கு முன் ஓசூ ரில் இருந்து சொந்த ஊரான தருமபுரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரி சோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய் யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தருமபுரி அரசு மருத்து வமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வியாழனன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.  ஏற்கனவே, தருமபுரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பல னின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது இரண் டாவது பலி ஏற்பட்டுள்ளதால் அம்மாவட்ட மக்கள் அச்ச மடைந்துள்ளனர்.