மும்பை
இந்தியாவில் ஹெச்.எம்.டி குளோபல் என்ற நிறுவனம் நோக்கியா மைக்ரோசாப்ட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.சாதாரண மொபைல் போன் (டச் ஸ்க்ரீன் அல்லாத) விற்பனையில் கொடிகட்டிப்பறந்த நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சற்று திணறி வருகிறது.
இதற்கு காரணம் ஒப்போ (OPPO), ரெட்மி (REDME), விவோ (VIVO), சாம்சங் (SAMSUNG) போன்ற ஸ்மார்ட் போன்களின் புதிய தொழில்நுட்ப வளர்ச்சி தான். 7 வருட இடைவேளைக்கு பின்பு ஸ்மார்ட்போன் விற்பனையில் மீண்டும் காலடிவைத்த நோக்கியா நோக்கியா 2.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து களமிறக்கி வாடிக்கையாளர்களின் ஆதரவு திரும்ப பெற முயற்சித்து வருகிறது. தற்போது பல தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்திய நோக்கியா 9.1 என்ற நிலையில் பயணித்து வருகிறது. இந்நிலையில், நோக்கியா 2.2 மற்றும் 3.2 (அனைத்து வகை ஜிபிகளும்) வகை மாடல்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ. 700 முதல் ரூ.1200 வரை குறைக்கப்பட்டுள்ளது. விலை விபரத்தை பிளிப்கார்ட், அமேசான் போன்ற இணைதளங்களில் பார்க்கலாம்.