மத்திய அரசு தகவல்
புதுதில்லி,நவ.21- நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற் காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்தி ரயான்- 2 விண்கலம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் அளித்த எழுத்துப்பூர்வ பதி லில், முதற்கட்டமாக நிலவின் மேற்பரப்பி லிருந்து 30 கிலோ மீட்டர் உயரம் வரை விநாடிக்கு ஆயிரத்து 683 மீட்டர் என்ற வேகத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப் பட்டது. இந்த வேகமானது 7.4 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்றதும், விநாடிக்கு 146 மீட்டர் என்ற அளவுக்கு குறைந்து விட்டது. திட்டமிடப்பட்டதைவிட வேகம் குறைந்ததே, கடின தரையிறக்கத்துக்கு காரணம் என்றும் விக்ரம் லேண்டர், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதியிலிருந்து 500 மீட்டருக்குள் கடினமாக தரையிறங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.