பாகிஸ்தான் கேப்டன் சர்ப ராஸ் அகமதுவை உலகக் கோப்பை தொடருக்கு முன்பு சக நாட்டு வீரரான சோயப் அக்தர் அவரது பருமனான உடலைக் கிண்டல் செய்தார். இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தின் போது மைதா னத்தில் கொட்டாவி விட்ட தற்குப் பாகிஸ்தான் மனித உரிமை அமைச்சர் கண்ட னம் தெரிவித்தார். இந்திய அணியிடம் படுதோல்வி யைச் சந்தித்ததற்கு சர்ப ராஸ் அகமது தான் காரணம் எனக் கூறி அவர் மீது பஞ்சாப் (பாகிஸ்தான்) நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கி லாந்து நாட்டின் பிரபல ஷாப்பிங் மாலிற்கு சர்பராஸ் சென்றுள்ளார். அங்கிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் செல்பி வீடியோவை ஆன் செய்து சர்பராஸை நோக்கி,”உங்களது உடல் மிகவும் பெருத்துள்ளது. பார்க்க பன்றி போல உள்ளீர் கள். உடலை குறைத்து கிரிக் கெட் விளையாடுங்கள்” என ஹிந்தியில் கூறி சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை கசியவிட் டார். ஏற்கெனவே பல சங்க டங்களுக்கு உள்ளாகியிருக் கும் சர்பராஸ் அகமதுவிற்கு தற்போது பொது இடத்தில் நேரடியாக விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று முளைத்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.