ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மும்பையில் நடைபெற உள்ள நிலையில், அப்போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு மகாராஷ்டிரா அரசு தடை விதித்துள்ளது.
2020-ஆம் ஆண்டின், ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கி மே 24-ஆம் தேதி வரை, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடக்கவுள்ளது. அதே சமயம், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இன்று நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மும்பையில் நடைபெற உள்ள நிலையில், அப்போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கு மகாராஷ்டிரா அரசு தடை விதித்துள்ளது.
முன்னதாக, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல் போட்டிகளை வரும் 29-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, இது குறித்து பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிசிசிஐ-க்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.