உலகக்கோப்பை தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கௌடர் வீசிய பவுன்சர் பந்து இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானின் கட்டை விரலைத் தாக்கி காயத்தை ஏற்படுத்தியது. மருத்துவ அறிக்கையில் தவான் 3 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரி லிருந்து ஷிகர் தவான் செவ்வாயன்று அறிவித்தார். அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் யாராவது ஒருவரை இங்கிலாந்து அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆலோசித்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சத மடித்து இந்திய அணி வெற்றிக்கனியைப் பறிக்க உதவிய ஷிகர் தவான் திடீரென உலகக்கோப்பையி லிருந்து விலகியது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.