தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 502 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 431 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில் 71 ரன்கள் இந்திய அணியிடம் இருக்கும் பட்சத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு 395 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.
இதனை தொடர்ந்து 395 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் முகமது சமி 5 விக்கெட்களையும், ஜடேஜா 4 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 க்கு என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.