திங்களன்று 2 லீக் ஆட்டங்கள் (குரூப் ஏ) நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இலங்கை அணி வங்கதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக ஞாயிறன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.