ஆஸ்திரேலிய டி20 அணிக்கு கேப்டனாக ஜோஷ் இங்லிஷ் செயல்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் டி20 அணியை கேப்டன் பெயரில்லாமல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 29 வயதாகும் விக்கெட் கீப்பர் பேட்டரான ஜோஷ் இங்லிஷ் புதிய டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20க்கு மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் இங்லிஷ் கேப்டனாக செயல்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்டர்- கவாஸ்கர் கோப்பை தயாரிப்புக்காக பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் 3ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார்கள் என்பதால் இங்லிஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மிட்செல் மார்ஷ், டிராவிஷ் ஹெட் தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவிட இருப்பதால் டி20 கேப்டனாக இந்தத் தொடருக்கு மட்டும் இங்லிஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. முதல் டி20 தொடர் நவ.14ஆம் தேதி தொடங்க உள்ளது.